
பாவூர்சத்திரம்:கல்லூரணியில் நடந்த அதிமுக விழாவில் திமுக, காங்., கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக நெல்லை மாவட்ட அவைத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில் அதிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நெல்லை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான அண்ணாமலை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அப்பாத்துரை, செல்வவிநாயகபுரம் கிளை செயலாளர் பாபு, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேசன் வரவேற்று பேசினார்.
விழாவில் திமுக பிரதிநிதி வைரசாமி, காங்., பிரதிநிதி மைக்கேல் உட்பட அருள்பாண்டியன், சுதாகர், பெருமாள் ஆகியோர் அதிமுக அவைத்தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு அதிமுக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசையா, மேலமெஞ்ஞானபுரம் ராஜன், பஞ்.,தலைவர்கள் ராதா, அருள்பாண்டியன், அருள்வேல்ராஜ், கதிரவன் மற்றும் சின்னநாடன், ராமசாமி ஆறுமுகநயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.

No comments:
Post a Comment