நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

20 June 2010

• தென்காசியில் நாளை(21/06/2010)அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்


மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி, ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து நாளை (21ம் தேதி) தென்காசியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதுகுறித்து நெல்லை புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர்பாண்டியன் கூறியிருப்பதாவது:- ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், ஐகோர்ட்டில் தமிழில் வழக்காட மத்திய அரசை வலியுறுத்தி, நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தென்காசியில் நாளை (21ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வேன் ஸ்டாண்ட் அருகே நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் கருப்பசாமி எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். புறநகர் மாவட்ட செயலாளர், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், மாணவரணி செயலாளர் வக்கீல் துரைப்பாண்டி முன்னிலை வகிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் எம்.ஜி.ஆர். இளைஞரணி, பேரவை, இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் கட்சியின் சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். அதிமுக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

.

3 comments:

  1. ரத்தத்தின் ரத்தமே வெற்றி மிக அருகில் உள்ளது. அயராது பாடுபடுவோம் அம்மாவை அரியணை ஏற்றுவோம் புனித ஜார்ஜ் கோட்டையில் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். கைக்கூலி கருணாநிதியின் கேளிக்கை கூடமாம் புதிய சட்டசபை கட்டிடத்தை புறக்கணிப்போம். வெற்றி நமதே

    ReplyDelete
  2. vettri pera valthukkal

    ReplyDelete
  3. CONGRATULATIONS.
    BY
    C.NAMBIRAJAN B.SC,B.L.,
    THOOTHUKUDI CITY SECRETERY
    YOUNG MEN AND YOUNG WOMEN BRIGADES

    ReplyDelete