நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

22 June 2010

தென்காசியில் நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்



தமிழில் வாதாட நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக வக்கீல் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் தென்காசியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர் கருப்பசாமி எம்எல்ஏ தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளர் செந்தூர்பாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், மாணவரணி செயலாளர் வக்கீல் துரைப்பாண்டி, புளியங்குடி நகராட்சி தலைவர் துரையப்பா, மதிமுக எம்எல்ஏ சதன்திருமலைக்குமார், முன்னாள் எம்எல்ஏ.,கள் சுப்பையாபாண்டியன், முருகையாபாண்டியன், மாணிக்கராஜ், சக்திவேல்முருகன்,மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜா , மாவட்ட பேரவை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் இசக்கி சுப்பையா, இலக்கிய அணி செயலாளர் ஆர்.எஸ்.கே.துரை, மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், வக்கீல் குமார் பாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் குமுதாபெருமாள், மாவட்ட இணை செயலாளர் ஞானபுனிதா,ராதாபுரம் ஒன்றிய செயலாளர் P.நாராயண பெருமாள், ராதாபுரம் கவுன்சிலர் K.P.K. செல்வராஜ், ராதாபுரம் ஒன்றிய அவை தலைவர் R.T.பால்சாமி , ராதாபுரம் இளைஞர் பாசறை ஒன்றிய (இ) செயலாளர் S.முத்துக்குமார் , நகர செயலாளர் முத்துக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி முத்துசாமி, தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், ஒன்றிய செயலாளர் குட்டீஸ்வரன், லாலாமணி, சங்கரநாராயணன், கிருஷ்ணசாமி, மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ராஜா முகமது (எ) தமிழ் வென்றி, கம்யூ., கட்சியை சேர்ந்த காசிவிஸ்வநாதன், நடராஜன், புதிய தமிழகம் சந்திரன், முருகேசன், முகமது ஹபீப் உட்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி எம்எல்ஏ பேசியதாவது:-தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் ஆட்சி நடந்து வருகிறது. வித்தைகளை காட்டும் அரசு நடக்கிறது. கோவையில் செம்மொழி மாநாடு எனக் கூறிக்கொண்டு அதிலும் கருணாநிதி குடும்ப நலனையே கருத்தாக கொண்டுள்ளார். செம்மொழி மாநாடு நடத்தும் கருணாநிதி குடும்பத்தில் ஆங்கில பெயர் கொண்டவர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் மொழியை காப்பதற்கும், தமிழகத்தை காப்பதற்கும், தமிழக மக்களின் பாசத்திற்குரிய தலைவராகவும் ஜெயலலிதா தான் விளங்கி வருகிறார்.இரண்டு ஏக்கர் நிலம் என்றார்கள்.. இலவச கலர் "டிவி' என்றார்கள்... இலவச சமையல் எரிவாயு என்றார்கள்... ஆனால் அதுவெல்லாம் வெறும் ஏமாற்று பணியாக தான் உள்ளது. தற்போது 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் என்கிறார்கள். இதுவும் ஏமாற்று வேலைதான். ஐகோர்டடில் தமிழில் வாதாட உரிமை கோரும் வக்கீல்களை கருணாநிதி கைது செய்கிறார்.தமிழகத்தில் மேலவை அமைத்திட மத்திய அரசிடம் அனுமதி கேட்கிறார். உடனடியாக கிடைக்கிறது.

சட்டசபை கட்ட வேண்டுமென கேட்கிறார் அதற்கும் அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் தமிழில் வாதாட வக்கீல்கள் உரிமைகளை கேட்டால் அதற்கு மட்டும் மத்திய அரசிடம் கேட்க தயங்குகிறார்.புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபை கட்டடத்திற்கு 400 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகவும், 4 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் வெளிமாநிலத்தில் வரவழைக்கப்பட்ட அந்த பணியாளர்களுக்கு 400 ரூபாய் சம்பளம் என கூறி 200 ரூபாய் மட்டுமே வழங்கியிருப்பதாக பேசப்படுகிறது. இந்த பணியிலும் வெளிமாநிலத்துக்காரர்கள் தான் கருணாநிதியால் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் கூட தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.ஏனென்றால் தமிகத்தை சேர்ந்தவர்கள் தங்களது கூலியை நியாயமாக பெற்று விடுவார்கள்.

தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தை விட கனிமொழி கூட்டிடும் வேலைவாய்ப்பு முகாமிற்கு தான் தமிழக அரசு முக்கித்துவம் தருகிறது. நெல்லை மாவட்டத்தில் 78 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி நிறுத்தப்பட்டு விட்டது.எனவே தமிழக மக்கள் எந்தவகையிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மின்தடையை கண்டு கொள்ளவில்லை. விலைவாசி ஏற்றத்தையும் கண்டு கொள்ளவில்லை. தமிழக மக்கள் தொடர்ந்து கருணாநிதி அரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.

1 comment:

  1. நன்றி முத்துகுமார் அவர்கள்

    ReplyDelete