
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.செங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட் கேசவபுரம், புளியரை, இலத்தூர், அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, ஆய்க்குடி, பாலமார்த்தாண்டபுரம், அச்சன்புதூர், தெற்குமேடு ஆகிய பகுதிகளில் அதிமுக சார்பில் நடந்த எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் டாக்டர் சுசீகரன் முன்னிலை வகித்தார். அந்தந்த பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் லியாகத்அலி, ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கனகராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி செண்பகவல்லி, தெற்குமேடு கிளை செயலாளர் கோமதிராஜா, மேலமைப்பு பிரதிநிதி சாமியாபிள்ளை, புளியரை சிவனுபாண்டியன், வேல்சாமிதேவர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலகரம் டவுன் பஞ்., நன்னகரத்தில் நடந்த எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு மேலகரம் டவுன் பஞ்., துணைத் தலைவரும், தென்காசி சட்டசபை தொகுதி இணை செயலாளருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் சின்னத்துரைபாண்டியன் முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மேலகரம் ஜெ.பேரவை செயலாளர் ஆட்டோ பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் முருகசாமி, சேகர், காளியப்பன், அண்ணா, தொழிற்சங்க ரத்தினகுமார், ஆல்பர்ட், அமிர்தம், முருகன், மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment